சோலா பாட்டூரே (Chole Bhature).
சோலாபாட்டூரே (Chole Bhature)
சோலா பாட்டூரே என்பது நார்த் இந்தியாவின் பிரபலமான மற்றும் டெல்லியில் மிகவும் பிரபலம் பெற்ற உணவாகும். இது இரண்டு பகுதிகளைக் கொண்டது: சோலா (கொண்டைக்கடலை கறி) மற்றும் பாட்டூரே (ரொட்டி). இந்த உணவு மசாலா நிறைந்த கடலைக் கறியுடன், மென்மையான, பொன்னிறப் பூரிகளுடன் சேர்த்து பரிமாறப்படும்.
தேவையான பொருட்கள்:
சோலா (கொண்டைக்கடலை கறி) தயாரிக்க:
-
கொண்டைக்கடலை – 1 கப் (ஓரிரவு ஊறவைக்கவும்)
-
தக்காளி – 2
-
சின்ன வெங்காயம் – 1
-
இஞ்சி – 1 இன்ச் துண்டு
-
பூண்டு – 4 பற்கள்
-
பச்சை மிளகாய் – 2
-
தேங்காய் – 2 டீஸ்பூன்
-
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோலா மசாலா – 1 டீஸ்பூன்
-
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
-
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
-
கறிவேப்பிலை – சிறிதளவு
-
உப்பு – தேவையான அளவு
-
மல்லித்தழை – அலங்கரிக்க
பாட்டூரே ( பூரி) தயாரிக்க:
-
மைதா மாவு – 2 கப்
-
சீனி – 1 டீஸ்பூன்
-
உப்பு – 1/4 டீஸ்பூன்
-
தயிர் – 1/4 கப்
-
பசும்பால் – 1/2 கப்
-
எண்ணெய் – வருக்க
செய்முறை: click click click me please
சோலா:
-
முதல் நாளிரவு கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊறவைக்கவும்.
-
காலை எழுந்தவுடன் கடலையை சுத்தமான நீரில் வேக வைக்கவும்.
-
மிக்சியில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுத்து, அரைத்த விழுது சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும்.
-
வதக்கிய பிறகு தக்காளி, சோலை மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
-
சோலை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்கு வேக வைக்கவும்.
-
கடைசியாக மல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
பாட்டூரே: click click click me please
-
மைதா, சீனி, உப்பு, தயிர், பசும்பால் சேர்த்து, நன்றாக பிசைந்து, 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
-
பின் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, தட்டிப் பூரி போன்றாக உலர்வை செய்யவும்.
-
எண்ணெயை காயவைத்து பூரிகளை ஆழமாகவும், பொன்னிறமாகவும் வருக்கவும்.
பரிமாறும் முறை:
சோலா பாட்டூரேவை வெந்த பாட்டூரே மற்றும் சூடான சோலாக்களுடன் சுடச்சுட பரிமாறலாம். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் எலுமிச்சை துண்டுகளையும் சேர்த்து சாப்பிடுவதால் மிக சுவையாக இருக்கும். சோலா பாட்டூரே ஒரு முழு மாலை உணவாக இருக்கும்.
,%20served%20wit.webp)
Comments
Post a Comment